--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கிய இரு காவலர்கள்..!

7

பொள்ளாச்சி அருகே தொடர் கனமழைவெள்ளத்தில் சிக்கி கொண்ட இருவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் தண்ணீர் புகுந்ததால் அங்கு இரவு நேர காவலர் பணி புரிந்துவரும் இருவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக பொள்ளாச்சியில் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

 

அதன் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

Right Menu Icon