அரசு பேருந்து மோதியதில் பறக்கும் படை காவலர்கள் இருவர் உயிரிழப்பு..!
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த பறக்கும் படை காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிவகங்கையிலிருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப்பேருந்து சாலையோரம் நின்றிருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் மீது மோதியது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் உதவி சிறப்பு ஆய்வாளர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த காவலர்கள், சாந்தகுமார், பாலசுப்பிரமணியம் இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காவலர் பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.






