பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுக்க முயன்ற இருவர் கைது..!
சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அந்த பெண் ஏரியா ரவுண்டானா பகுதியில் உள்ள சினிமா நிறுவனம் ஒன்றில் மூன்று மாதங்களாக வேலை பார்ப்பதாகவும் மூன்று மாதமும் சம்பளம் தரவில்லை எனவும் இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அங்கு பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். இந்த சினிமா நிறுவனத்தை நடத்தி வந்த இருவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.





