வீட்டிற்குள் புகுந்த மர்ம விலங்கு..! மக்கள் அச்சம்..!
தஞ்சையில் நெசவாளர் வீட்டிற்குள் சென்ற அரிய வகை மர நாயை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். தஞ்சையில் வசித்து வருபவர் நெசவாளர். இவரது வீட்டிற்குள் வித்தியாசமான விலங்கு ஒன்று பீரோவின் பின் சென்று ஒளிந்து கொண்டதை தொடர்ந்து அவர் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் கூண்டு வைத்து நான்கு மணி நேரம் போராடி அரிய வகை மர நாயை மீட்டனர். இது அரியவகை விலங்கு என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





