--- --:--:-- --

புதிய சட்டங்களை ஏற்க டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது..!

1

த்திய அரசு மேற்கொண்டு வந்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொள்ள நீண்ட இழுபறிக்குப் பிறகு சம்மதம் தெரிவித்துள்ளது டிவிட்டர் .

 

புதிய சட்டங்களின் படி இந்தியாவில் எழும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறை தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் ட்விட்டர் நியமித்துள்ளது.

 

அதேநேரம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல், புகார்களை கையாளுதல், அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து ட்விட்டரிடம் இருத்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Leave a Reply

Right Menu Icon