--- --:--:-- --

பதவியேற்பு விழாவைப் புறக்கணித்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப்..!

2

மெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.

 

தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய டிரம்ப் உரையாற்றியுள்ளார். அப்போது தங்கள் ஆட்சியில் பெரிய அளவில் வரிகள் குறைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் புதிய ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படும் என்று கூறினார்.

 

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுத்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று அமெரிக்க மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

தனது உரையை நிறைவு செய்த பின்னர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார். புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு விமானத்தில் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.

 

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னாள் அதிபர் புறக்கணித்துள்ளது நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon