--- --:--:-- --

த்ரிஷா – ஜெயம் ரவிக்கு திடீரென ட்விட்டரில் ப்ளூ டிக் நீக்கம்!

12

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ப்ரோமோஷன் மிக தீவிரமாக படக்குழு தொடங்கி இருக்கிறது. படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் நிலையில் படக்குழு பல நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

 

சென்னையை தொடர்ந்து நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர்.தற்போது ட்விட்டரில் பிசியாக இருந்து வரும் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிட்டது. அதற்கு காரணம் அவர்கள் ட்விட்டரில் பெயரை மாற்றியது தான்.

 

குந்தவை என ட்விட்டரில் பெயர் மாற்றிய த்ரிஷா blue tick இழந்திருக்கிறார். பட ப்ரோமோஷனுக்காக செய்த விஷயத்தால் வந்த விளைவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Right Menu Icon