மலேசியாவில் பணியாற்றிய திரிபுரா இளைஞர் உயிரிழப்பு! காரணம் கொரொனா?
மலேசியாவில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் கொரொனா வைரஸ் தாக்கி உயிரிழந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திரிபுராவை சேர்ந்த மனிர் ஹுசைன் என்ற இளைஞர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அண்மையில் அவருக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கொரானா வைரஸ் தாக்கத்தால் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து மலேசிய மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து திரிபுராவில் உள்ள அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோகத்தில் இருக்கும் அந்த இளைஞரின் குடும்பத்தினர் அவரது உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.






