நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்முன்னே பெண் ஊழியரை கடித்த புலி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்றரை வயது புலி கடித்து காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா திமுக தமிழக முதல்வரால் ரித்திக் என பெயர் சூட்டப்பட்ட புலி பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பார்த்தார். அப்போது பராமரிப்பாளர் விஜயா புலி அடைக்கப்பட்ட இடத்தில் கையை நுழைத்து புலியை தடவியபோது அந்த புலி விஜயாவின் வலது கையை கடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






