--- --:--:-- --

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம்..பாஜக அதிரடி அறிவிப்பு!

1

மிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, பாஜகவின் இதர பிற்படுத்த பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

 

இந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் திருச்சி சூர்யா ஈடுபட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, பாஜகவில் ரவுடிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதற்கு, பாஜகவினரின் குற்றப் பின்னணியை நிரூபித்தால் பதவி விலகுவதாக சூர்யா கூறியிருந்தார்.

 

இதே போன்று, பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓராண்டு நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி அவதூறுகளை பரப்பியதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில அலுவலக செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள கல்யாண ராமன், தன்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே தனது அடிப்படை குற்றச்சாட்டு என்றும் அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி எனவும் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon