திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு திடுக்கிடும் தகவல்கள்
திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் திண்டுக்கல்லில் பிடிபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 470 சவரன் நகை 19 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்பாக தஞ்சை புதுக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை திண்டுக்கல்லில் பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அவர் திருச்சியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சமயபுரம் கூட்டுறவு வங்கி மண்ணச்சநல்லூர் கொசமட்டம் பைனான்ஸ் ஆகிய பகுதிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடித்தது ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராதாகிருஷ்ணன் லலிதா ஜுவல்லரி வாங்கி கொலையில் சம்பந்தப்பட்ட முருகன் சுரேஷ் கணேசன் ஆகியோர் இணைந்து நிகழ்த்திய தெரியவந்துள்ளது.
அதற்காக திட்டமிட்டு மதுரையில் அதற்கான உபகரணங்களை வாங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் வேலை செய்து வங்கிக் கொள்ளையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






