--- --:--:-- --

மண் சரிவால் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்..!

4

குஜராத்திலிருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 5 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டம் நோக்கி இயங்கும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் மற்றும் உடுப்பி இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் ஐந்து மணி நேரம் ஒரே இடத்தில் நின்றுள்ளது.

 

. ஜூன் மாதம் 13ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்பட்ட ரயில் 15ம் தேதியான இன்று மாலை நெல்லை வந்தடைய வேண்டும். ஆனால் 5.30 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற ரயில், காலை எட்டு முப்பது மணி அளவில் இஞ்சின் பின்னோக்கி ரயிலை இழுத்துச் சென்றது. ஐந்து கிலோ மீட்டர் தாண்டியும் ரயில் பின்னோக்கி செல்வதால் பயணிகள் வேதனையடைந்துள்ளனர்.

 

சரியான நேரத்திற்கு ஊருக்கும் செல்லமுடியாமலும், ரயில் பின்னோக்கியே சென்று கொண்டிருப்பதாலும் பயணிகள் அசௌகரியமாக இருக்கின்றனர்.மாற்று பாதையில் இயக்கப்படுமா அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரயில்வே நிறுவனம் தரப்பில் இருந்து அதிகபூர்வமாக கூறப்படவில்லை என குடும்பத்தினருடன் பயணிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் இதுவரை புரியவில்லை என நெல்லையைச் சேர்ந்த இப்ராஹிம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon