சிறுமிக்கு பெற்றோர் கண் முன்னே அரங்கேறிய சோகம்..!
பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்காய் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் நாராயணன் என்பவர் நீச்சல் குளம் ஒன்றைக் கட்டி அதை வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு நடத்தி வருகிறார்.
இங்கு குடும்பத்துடன் வந்த ஹன்சிகா என்ற ஒன்பது வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் தகவலறிந்து சென்ற போலீசார் ஹன்சிகாவின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீச்சல் குளத்தில் உரிமையாளரான நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.





