மாயமான கல்லூரி மாணவி.. 3 நாள் கழித்து கண்டுபிடித்து கொடுத்த உறவினர்கள்..!
செங்கல்பட்டு அருகே மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தர கோரி பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். சூனாம்பேடு அடுத்த வில்லியம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் சசிகலா.
கடந்த நான்காம் தேதி கல்லூரிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இது குறித்து சூனாபேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இரண்டாவது நாளாக மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது சாலையில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.





