--- --:--:-- --

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவுக்கு முன்னுதாரணம் – சிறந்த மாநிலம்’ விருது வென்ற தமிழ்நாடு

3

டல் உறுப்பு தானத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ‘சிறந்த மாநிலம்’ என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் இந்த விருதை வழங்கி பாராட்டினார்.

 

 

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பு மற்றும் உயிர்களை காப்பாற்றும் மருத்துவச் சேவைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டுக்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, உறுப்பு தானத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon