எடப்பாடி தலைமையில் அதிமுக பலம் குறைந்தது – நத்தம் விஸ்வநாதன் கடும் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான நத்தம் ஆர். விஸ்வநாதன், கட்சியின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி கே. பழனிசாமி தலைமைக்கு கட்சி வந்தபோது அதிமுகவுக்கு 134 எம்.எல்.ஏ.க்களும், 50 எம்.பி.க்களும் இருந்தனர்.
ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கட்சியின் நிலை மாறிவிட்டது” என்று குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை முழுமையாக ஆராயாமல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் தலைமையினர் சுயபரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நத்தம் விஸ்வநாதனின் இந்தக் கருத்துகள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



