நள்ளிரவில் இரட்டை குழந்தைகளுக்கு வாயில் நுரை தள்ளிய சோகம்..!
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை இரட்டை குழந்தைகள் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில் குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சந்திரலிங்கம் சூரியலிங்கம் ஆகிய இரண்டு வயது இரட்டை குழந்தைகள் சாப்பிட்டதாகவும் இரவு இரண்டு பேரையும் மஞ்சு தூங்க வைத்த பொழுது அவர்கள் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






