--- --:--:-- --

ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த போது விபரீதம்..!

6

துரை கூடல் நகரில் உள்ள ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த மாணவர்களின் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளது. அந்த மின் பாதையில் ரயிலை இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்கிறது.

 

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் இருப்பதால் சரக்கு ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் அந்த ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள நகரை சேர்ந்த பழனி என்பவரின் 17 வயது மகன் விக்னேஷ் தனது நண்பர்களுடன் நின்று பயணிகள் ரயிலின் பெட்டியின் மீது ஏறியுள்ளார்.

 

நண்பர்களுடன் ரயில் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருபத்தைந்தாயிரம் வோல்ட் மின்சாரம் பாய மின்கம்பிகள் உரசி தூக்கி வீசப்பட்டு உடல் கருகி படுகாயமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

Right Menu Icon