தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மது கடத்தல்!
முதன்முறையாக தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவையில் மதுபாட்டில்கள் குறைந்த விலைக்கு விற்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மது அருந்தவும், கடத்தவும் வருவது வழக்கம். தற்போது ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்படும் நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புதுவை குடிமகன்கள் விழுப்புரத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை திருக்கானூர் இல் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இரு சக்கர வாகனத்தில் பெட்டியில் எடுத்து வரப்பட்ட 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சரவணன், ரமேஷ் என்ற இருவரை கைது செய்தனர். அவர்கள் விழுப்புரத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.







