--- --:--:-- --

டிக் டாக்கில் ரௌடி போல கெத்து காட்டிய கும்பல்! ரியல் ரௌடியுடன் நடந்த சண்டை கொலையில் முடிந்தது!

6.1

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் அமர்ந்து தங்களை தாங்களே தாதாக்கள் போல காட்டிக் கொண்ட கைப்புள்ள கும்பலைச் சேர்ந்த போஸ் என்பவர் தான் விபரீதமாக அடித்து கொலை செய்யப்பட்டவர். இந்தப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ள ரவுடியான விஜய் என்பவரின் தலைமையில் ஒரு கும்பலும், ராபர்ட் என்பவரின் தலைமையில் ஒரு கும்பலும் செயல்பட்டு வருகிறது.

 

இதில் டிக்டாக்கில் தங்களை ரவுடியாக நினைத்து வீடியோக்களை பதிவிடுவது ராபர்ட் கும்பலின் வழக்கம். இந்நிலையில் ரவுடி விஜய்யின் தம்பியை அழைத்து ராபர்ட் கும்பல் டிக்டாக்கில் தங்களிடம் அடிவாங்கும் அடிமையாக நடிக்க அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அவர் தனது அண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவிக்க வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த விஜய் செல்போன் மூலம் எச்சரித்துள்ளதாக செல்லப்படுகிறது.

அதற்கு எச்சரிக்கையை தங்கள் ஏரியாவுக்கு வந்து சொல்ல முடியுமா என்று ராபர்ட்டும் அவரது கூட்டாளிகளும் எதிர் சவால் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மது வாங்கியதும் தனது கூட்டாளிகள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் உடன் போதை ஏற்றிக் கொண்டு பூஜை வக்கீல் தெருவுக்குள் நுழைந்துள்ளார்.

 

அப்போது மளிகை கடை அருகே கும்பலாக அமர்ந்து கொண்டு செல்போனில் கானா பாடல் ஒலிக்க விட்டுக்கொண்டிருந்த ராபர்ட் கும்பலை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அடி தாங்காமல் ராபர்ட் உள்ளிட்ட அனைவரும் ஓட, கையில் சிக்கிய போஸ் என்ற இளைஞரை பிடித்து தலை, கை, கால், மார்பு என கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

 

இதில் பலத்த காயமடைந்த போஸ் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரை அப்படியே போட்டுவிட்டு ரவுடி கும்பல் தப்பி விட மீண்டும் திரும்பி வந்த ராபர்ட்டின் கைப்புள்ள கும்பல் போஸின் சடலத்தை எடுத்துக்கொண்டு போய் தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதாக கூறி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளது.

அங்கிருந்த மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் விரைந்து வந்த போலீசார் டிக்டாக்கில் தங்களை ரவுடிகளாக நினைத்து வாழ்ந்து வந்த கைப்புள்ள கும்பலை பிடித்து விசாரித்தபோது நிஜ ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ரவுடி விஜய், அஜித், உதயா, வருன் ராஜ், ராஜசேகர் உள்ளிட்ட 7 பேர் கும்பலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

தாங்கள் கையால் மட்டுமே அடித்ததாக விஜய் கும்பல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் போஸ் கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர் கையால் தாக்கியதில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு போஸ் பலவீனமாக இருந்தாரா என்ற கேள்வியுடன் இந்த கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கூடா நட்பால் அடிமையாகி தெருமுனையில் கும்பலாக அமர்ந்து கொண்டு கானா பாடல் வரிகளை நம்பி வந்த வாய்க்கொழுப்பு கும்பலால் இந்த விபரீத கொலை நடந்துள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon