திருவில்லிபுத்தூரில் தங்கத்தில் உருவாக்கப்பட்ட டார்ச்லைட்..!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் 260 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச்லைட் உருவாக்கி நகை தொழிலாளர் ஒருவர் சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தங்கத்தால் மிகச் சிறிய அளவில் செஸ் போர்டு செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் நகை தொழிலாளி மணிகண்டன். இவர் சிறிய மின்விசிறி, பைக், தங்க மோதிரத்தில் வாட்ச் பற்றி மிக சிறிய புத்தகத்தில் திருக்குறள் எழுதி பல்வேறு புத்தகங்களில் இடம் பிடித்திருக்கிறார்.
இதேபோன்று தங்கத்தின் மிகச்சிறிய டார்ச்சர் செய்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு பரிசாக வழங்கி பாராட்டு பெற்றுள்ளார்.






