பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவியை கடத்திக்கொண்டு சென்ற மர்மநபர்கள்..!
கர்நாடக மாநிலம் கோலார் அருகே சாலையில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவர் பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்டுள்ளார். கொள்பேட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவியை இனோவா காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி செல்லும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடத்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கொள்பேட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவியின் முன்னாள் காதலர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த காவல்துறையினர் கடத்தப்பட்ட மாணவியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.







