பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று..!
தமிழகத்தின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. காமராஜர் தமிழகத்திற்கு கல்விக்கண் தந்த பேராசான் அவர். இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாமல் என்று அம்மனிதன் தான் மாணவன் வறுமையால் இடைநிற்றல் கூடாது என்று மதிய உணவு திட்டம் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கினார்.
1903 ஆம் ஆண்டு ஜூலை 15 தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராக இன்றளவும் போற்றப்படுகின்ற இந்தியாவின் தலைவர்களை எளிதில் கண்டெடுத்த அந்த அற்புத தலைவர் பிறந்தார். சுதந்திரத்தின் தீ நாடெங்கும் பற்றி எரிந்த நிலையில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பின் பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர் ஆனார்.
போராட்டக் களம் பல கண்டு சிறையும் சென்றார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தின் மாநில தலைவர் ஆனார். 1940-ல் தொடங்கி 14 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்த காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழ்த்திரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
எட்டு பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை ஒன்றின் மாநிலத்தில் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவர் பெயரை சொல்லிக்கொண்டு உள்ளன.ஆழியாறு பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டி பாசன வசதி செய்து விவசாயம் செழிக்க செய்தார். உழவுக்கு உரியவை செய்தவர் என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை கொண்டு தந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார்.
அவர் செய்ததில் மிக முக்கிய பணியாக இன்றளவும் கருதப்படுவது தமிழகத்தில் கல்வி கண் திறக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளே. மாநிலம் முழுவதும் அவர் புதிய பள்ளிக் கூடங்களைக் கட்ட நடவடிக்கை எடுத்ததோடு ஏற்கனவே இருந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றின் தரத்தை உயர்த்தவும் அரும்பாடுபட்டார்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது அவரது முக்கிய கொள்கையாக இருந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார். காமராஜர் பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்திய தோடு மகத்தான மதிய உணவு திட்டத்தின் மூலம் ஏழை சிறுவர்களின் வயிறு நிறைந்து வாட்டம் போக்கினார்.
வகுத்திட்ட கொள்கைகளின் பால் வாழ்ந்த காலமெல்லாம் மக்களின் நலன் சார்ந்த கனவு கண்ட அந்த பெருந்தலைவன் நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு லால் பகதூர் சாஸ்திரி அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகிய இருவரையும் கொண்டுவந்து கிங்மேக்கர் என்ற அடைமொழியை பெற்றவர்.
காலம் எல்லாம் கதர் அணிந்து மக்கள் பணியாற்றிய அந்த மாபெரும் தலைவர் 1975 ஆம் ஆண்டு தன்னை ஆட்கொண்ட தலைவரின் பிறந்தநாளையே தனது நினைவு நாளாக்கி சென்றார். தாய்த்திரு நாட்டின் மேன்மைக்கு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி பெருமை கொண்டனர். தமிழகத்தில் கல்வி கண் திறந்த அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை தேடிக் கொண்டது தமிழக அரசு.






