--- --:--:-- --

பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி ‘ pay per view ‘

4

விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் பே பெர் வியூ முறையில் முதன் முறையாக வரும் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கொரொனா ஊரடங்கால் நான்கு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மாஸ்டர், சூரரைப்போற்று, கோப்ரா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரும் நாள் தெரியாமல் உள்ளன.

 

இந்த நிலையில் பொன்மகள்வந்தாள், பென்குவின் திரைப்படங்கள் டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் வெளியாகின. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தொடங்கியுள்ள ரீகல் டாக்கீஸ் என்கிற டிஜிட்டல் தளத்தில் பி‌பி‌வி முறையில் விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே இந்த தளத்தில் பல குறும்படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி புதுமுகங்கள் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் என்ற திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையிடப்படுகிறது. சிறிய படங்களுக்கு டிஜிட்டல் தளம் ஆதரவு கரம் நீட்டுவது ஆக அதன் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon