--- --:--:-- --

நெற்பயிர்களை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்..!

6

டகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் இன்றைக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

 

தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெற்பயர்களுக்காக காப்பீடு செய்ய இன்று கடைசி நாள், காப்பீடு செய்யாத விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த பயிர் காப்பீடு செய்ய வேளாண் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் இதுவரை 15.9 லட்சம் ஏக்கர் பரப்பளவு 15 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon