--- --:--:-- --

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பெயிண்டர்..!

7

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் தவறாக நடக்கும் முயன்றவரை போலீசார் கைது செய்தனர். ஐஐடியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று இரவு ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து சென்றார்.

 

அப்பொழுது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஒருவர் மாணவி இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் தனது பைக்கில் ஏறுங்கள் என்று தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன மாணவி காவலாளிகளிடம் புகார் அளித்தார்.

 

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அந்த நபர் ஐஐடியில் பெயிண்டராக பணியாற்றிய வசந்த் என்பது தெரியவந்தது. போதையில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon