மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
அதீத கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தால் பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலன் கருதி இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
இதைப் போல காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தேங்கி இருக்கும் மாங்காடு பகுதியில் குன்றத்தூர் தாலுகாவில் தான் வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.





