--- --:--:-- --

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

1

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுக எம் பி ஆர் ராசா இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் இயங்கவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காவல்துறை பாதுகாப்புடன் இயங்கிவருகின்றன. இதற்கிடையே இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon