--- --:--:-- --

இறந்த உடல்களை ஒப்படைக்க, இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு “கையூட்டு  பெறுவோர்  மீது   கடும் நடவடிக்கை!” திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

46

நாட்டின் மிகபெரிய அச்சுறுத்தலாக கொரோன பெருந்தொற்று இருந்துவரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுவோர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென  திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை நன்முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.

 

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

 

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளை நேரடியாக அணுகி உரிய சிகிக்சையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

 

 அரசின் இலவச மருத்துவ மற்றும் இதர அரசு சேவைகளுக்கு கையூட்டு பெறுபவர்கள் மீது சட்டபடியாகவும் துறைரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் இறந்த உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் மற்றும் இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் கையூட்டு பெறுவதாக புகார்கள் வரப்பெற்றால், தொடர்புடைய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  திருப்பூர், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon