--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

3

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு சிபிசிஐடி சிபிஐ டிஎன்பிஎஸ்சி ஆகியன இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் ஆசியோடு நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றால் இந்த வழக்குகளில் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் அனைத்தையும் தொடர்பாக வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு தமிழக அரசு சிபிசிஐடி சிபிஐ மற்றும் டிஎன்பிஎஸ்சி இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon