--- --:--:-- --

மாஸ்டர் திரைப்பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு

2

நடிகர் விஜயின் பிகில் திரைப்பட தயாரிப்பாளரை தொடர்ந்து மாஸ்டர் திரைப்பட இணை தயாரிப்பாளரும் வருமானவரித் துறையின் கண்காணிப்பில் சிக்கியுள்ளார். நடிகர் விஜய் நடித்து திரையிடலுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் உரிமங்கள் சுமார் 220 கோடிக்கு விற்பனை ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் படத்தின் வியாபாரத்தை கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தின் மூலம் லலித் குமாருக்கு சுமார் 50 கோடி ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படும் நிலையில், சென்னையில் தியாகராய நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள லலித்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதலே ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில் வருமானவரித் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் இருந்தே வருமான வரித்துறையினர் அழைத்துச்சென்று பிகில் திரைப்படம் வசூல் தொடர்பாக விசாரித்தனர்.

 

விஜய்யின் வீட்டில் மட்டுமல்லாமல் பிகில் திரைப்படத் தயாரிப்பாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon