--- --:--:-- --

நடத்தை விதிகளை மீறினாரா ராகுல்? ஆணையத்திடம் பாஜக புகார்!

L Murugan Rahul

கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் ஆணையத்திடம் தமிழக பாஜக புகார் அளித்துள்ளது.

 

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அண்மையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறியதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடித்தத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 1ம் தேதி கன்னியாகுமரி பிரசாரத்தின் போது கல்வி நிறுவனங்களில் ராகுல் வாக்கு சேகரித்தார். அங்கு அரசியல் பிரச்சாரம் செய்வதன் மூலம் மாதிரி நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். மாணவர்களுடன் ராகுல் பேசியபோது, நீட் தேர்வு, புதிய தேசிய கல்வி கொள்கை உள்ளிட்டவை குறித்து அரசியல் கருத்துகளோடு இணைத்து பேசியுள்ளார். தேர்தல் ரீதியாக மாணவர்களை தூண்டிவிடும் வகையில் ராகுலின் பேச்சு இருந்தது.

 

எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்துடன் இனி தமிழகத்தில் அவர் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று, கடிதத்தில் பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.

 

எனினும், பாஜகவின் இந்த புகார் குறித்து, காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்த கருத்தோ, பதிலோ அளிக்கப்படவில்லை. ராகுலின் பிரசாரத்திற்கு செக் வைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon