--- --:--:-- --

திருப்பூர் இனி திமுக கோட்டை.. எல்லா பெருமையும் எம்.எல்.ஏ செல்வராஜுக்கே!

271212059_3083962748529407_7177665976025722003_n

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜின் அதிரடி கட்சிப் பணிகளால், திருப்பூரில் திமுக வலுப்பெற்று வருகிறது. இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை தந்திருக்கிறது.

 

திருப்பூர் மாநகராட்சியின் முதலாவது மேயர் என்ற சிறப்புக்குரியவர் எம்.எல்.ஏ. செல்வராஜ். திமுக தலைமைக்கழகம் இவர் மீது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது. அதை செவ்வனே நிறைவேற்றி, மேலிடத் தலைவர்களின் பாராட்டுதல்களையும் எம்.எல்.ஏ செல்வராஜ் பெற்று வருகிறார்.

 

இதன் பலனாக, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட, செல்வராஜுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு தந்தார். திருப்பூர் மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ள நல்ல பெயராலும், தனது கடின உழைப்பாலும், செல்வராஜ் அபாரமாக வெற்றி பெற்று, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆனார்.

 

வெற்றி பெற்றதும் பலருக்கு இறுமாப்பு வந்துவிடும்; வென்ற கையோடு தொகுதியை மறந்துவிடுவார்கள். செல்வராஜ் எம்.எல்.ஏ., இதற்கு நேர்மாறானவர். நன்றி அறிவிப்பு சொன்ன கையோடு, தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் பணிகளை செய்து தரத் தொடங்கினார்.

 

சில இடங்களில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு தாமதமான நிலையில், தானே களமிறங்கி, குடிநீர் தேவை, சாக்கடை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை எம்.எல்.ஏ. செல்வராஜ் அதிரடியாக மேற்கொண்டார். நவம்பரில் பெய்த மழைக்காலத்தில், டிவிட்டரில் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து அசத்தினார்.

 

எல்லாவற்றையும்விட முக்கியச் சாதனையாக, காலேஜ் ரோடு, கொங்கணகிரி அருகே இருந்த மதுக்கடைகள், பார் உள்ளிட்டவற்றை, தானே முன்னின்று போராட்டம் நடத்தி, செல்வராஜ் எம்.எல்.ஏ. அகற்றினார். பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை கட்சி வேறுபாடின்றி மக்கள் வரவேற்றனர்.

 

இதுபோன்ற மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் தந்து செல்வராஜ் எம்.எல்.ஏ செய்து வரும் பணிகளால், அவர் மீது மட்டுமின்றி, அவர் சார்ந்துள்ள ஆளும் திமுகவும் திருப்பூரில் பலம் மிக்கதாக மாறியுள்ளது. திருப்பூர் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில், எம்.எல்.ஏ. செல்வராஜ், அதை மாற்றிக் காட்டி இருக்கிறார்.

 

திருப்பூர் இனி திமுக கோட்டை..

 

இதன் தாக்கம், உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்தது. அதிமுகவின் கோட்டை என்ற நிலை தகர்த்தெறிந்து, மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியை வசப்படுத்தியது. செல்வராஜின் துடிப்பான பணிகளை கண்டு, அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரும், திமுக பக்கம் சாயத் தொடங்கி உள்ளனர்.

 

இதற்கு சமீபத்திய உதாரணம், அதிமுகவின் மிக முக்கிய புள்ளியான, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 10-வது வார்டு சுயேட்சை (அஇஅதிமுக) மாமன்ற உறுப்பினர் பா.பிரேமலதா (கோட்டா பாலு) திமுகவில் இணைந்திருப்பதை கூறலாம். மாநகராட்சி தேர்தலில் 10, 22வது வார்டில் வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன், பா.பிரேமலதா கோட்டா பாலு செல்வராஜின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

 

மாற்றுக் கட்சியினரும் திமுகவுக்கு வருவதால், எம்.எல்.ஏ செல்வராஜ் உற்சாகத்தில் உள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர், Ex மண்டல தலைவர் இராதாகிருஷ்ணன், அதிமுக பா.பிரேமலதா கோட்டா பாலு, அதிமுக 22வது வட்ட செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற து.தலைவர் கே.பழனிச்சாமி ஆகியோர் இன்று கழகத் தலைவர் தலைமையில் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

 

ஒரு காலத்தில் திருப்பூர் என்றாலே திமுகவுக்கு வேப்பங்காயாக கசந்த நிலை மாறி, இன்று டாலர் சிட்டியிலும் சூரியன் பிரகாசிக்கிறது. இதில், எம்.எல்.ஏ. செல்வராஜ் போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளின் அயராத உழைப்பும் பங்களிப்பும் உள்ளது என்பதை உண்மை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon