--- --:--:-- --

தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

6

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக கோவை, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

 

இதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

எனவே அந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon