--- --:--:-- --

போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம்

12.2

கோவையில் பெட்ரோல் விற்பனை மைய உடைமாற்றும் இடத்தில் கேமராவை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் விற்பனை மைய உடைமாற்றும் இடத்தில் கேமராவை ரகசியமாக பொருத்தி பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

மணிகண்டனிடமிருந்து வீடியோவை பெற்ற போலி பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டார். 3 பேரும் தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon