பெரியகுளத்தில் கண்மாயில் மூழ்கி மூவர் உயிரிழப்பு..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் கோவில் திருவிழாவிற்காக வந்த பொழுது கண்மாயில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பன்னீருடன் கண்மாயில் குளித்து சபரிவாசன், மணிமாறன் ஆகிய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






