வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய ஏழு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மதுரை திரும்பியவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரொனா பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைகளும் சிலர் வீட்டு தனிமையிலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த வகை கொரொனா பாதிப்பு என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவலை தெரிவித்துள்ளது.






