மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீத முடிவு..!
பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பழனி தட்டான்குளம் பகுதியில் சபீனா என்ற பெண் நேற்று தனது இரண்டு மகள்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அதில் தனது கணவர் சென்னையில் பணிபுரிந்து வருவதால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இறந்த பிறகு தனது இரண்டு குழந்தைகள் தாய் இல்லாமல் இருக்கும் என்பதால் அவர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக சபீனா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






