கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் தொழிலுக்கு வர சொல்லி மிரட்டல்..!
கணவனை இழந்த மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்கள் youtube கும்பலால் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுவதாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் youtube சேனல் நடத்தி வருகிறார். இவர் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்களை நோட்டமிட்டு பாலியல் தொழிலில் சிக்க வைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார்கள் கொடுத்து நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கொடுக்கப்படும் பொய் புகாரால் சிலர் சிறை சென்று இன்று வரை வழக்கை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மதுரை, ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிலர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதில் சித்ரா மீது பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்க கோரி புகாரில் வலியுறுத்தி உள்ளனர்.





