--- --:--:-- --

சென்னையில் ஆயிரத்தை கடந்த கொரொனா உயிரிழப்பு..! அதிர்ச்சிக்கு உள்ளாகும் மக்கள்..!

9

சென்னையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கொரொனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சம் பேர், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருக்கின்றனர்.

 

சென்னையில் 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இரவு முதல் இன்று காலை வரை 25 பேர் கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போரூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

 

தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேர் என 25 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon