அமெரிக்காவில் நாயின் உரிமையாளருக்கு கொரொனா இருந்ததால் செல்லப்பிராணிக்கு கொரோனா தொற்று..!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜியா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரொனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆறு வயது செல்லப்பிராணியை சுகாதார பணியாளர்கள் கவனித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கொரொனா பரிசோதனை நடத்தியதில் நாய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே நாய்க்கு நரம்பு மண்டலத்தில் கோளாறு இருந்து இருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு நாய்க்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மிருகம் மூலம் கொரொனா பரவல் மிகவும் குறைவு என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.







