பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள்..!
நாகை அருகே முட்புதரில் கிடந்த சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. அய்யூர் கிராம குளக் கரையோரம் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர்.
அங்கு பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று முள் காயத்துடன் ஈ, எறும்பு மொய்த்தபடி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதைபதைத்த பெண்கள் அதனை கையில் எடுத்து உடலை சுத்தப்படுத்தி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கும் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் குழந்தை அனுப்பப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






