--- --:--:-- --

உக்ரைனில் மருத்துவம் முடிக்காதவர்கள் இந்தியாவில் தொடரலாம்..!

6

க்ரேனில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் போர் காரணமாக அங்கிருந்து தாயகம் திரும்பி வரும் நிலையில் அவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடரலாம் என்று தேசிய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

 

முதலாம் ஆண்டு தொடங்கி இறுதி ஆண்டு வரை படித்து வரும் மாணவர்கள் போர் காரணமாக தங்கள் படிப்பை பாதியில் விட்டு தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பயிற்சி மருத்துவத்தை முடிக்காதவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேசிய கல்வி வாரியம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று எஞ்சிய பயிற்சியோ முடிக்கலாம் என்று தேசிய மருத்துவக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதே முறையை மாநில மருத்துவ கவுன்சில் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon