--- --:--:-- --

திருவாடானை தொகுதியில் யார் ‘கை’ ஓங்குகிறது? இறுதிகட்ட நிலவரம்…

Election 03

எம்.எல்.ஏ கருணாஸ் செய்த தவற்றால், திருவாடானை தொகுதியில் அதிமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான போட்டி காங்கிரஸ்- அமமுக இடையே என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ‘கை’ தான் ஓங்கி இருக்கிறது என்பது இறுதிகட்ட நிலவரமாகும்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியமான தொகுதிகளில் திருவாடானை ஒன்று. இங்கு முக்குலத்தோர், யாதவர், முஸ்லிம், தேவேந்திரகுல வேளாளர், உடையார் உள்ளிட்ட பல சமூகத்தினரும் வசிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானையில் விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதானமாக உள்ளன.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருவாடானை தான் விஜபி தொகுதியாக இருந்தது. காரணம், அ.தி.மு.க கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், காமெடி நடிகருமான கருணாஸ் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், வெற்றி பெற்ற பிறகு, தொகுதிக்கு எதையும் அவர் செய்யவில்லை. எனவே எந்த கூட்டணியில் நின்று போட்டியிட்டாலும் மண்ணைக் கவ்வுவது உறுதி என்று தெரிந்து கருணாஸ் ஒதுங்கி கொண்டார்.

ஆனி முத்து (அதிமுக)

 

இந்த முறை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து களமிறங்கி இருக்கிறார். தி மு க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கைச்சின்னத்தில் கரு.மாணிக்கம் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார்கள். இந்த வேட்பாளர்களில் அதிமுக மற்றும் அமமுக வேட்பாளரும் சொந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள்,

 

காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களத்தில் உள்ள கரு.மாணிக்கம், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இருப்பினும் இத்தொகுதி எந்த ஒரு முன்னேற்றமும் அடையவில்லை என்று காங்கிரஸ் மற்றும் திமுகவினரே சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. அதுவே அவர்களுக்கு மைனஸ் ஆகும்.

கரு மாணிக்கம் (காங்கிரஸ்)

 

அதே நேரம், தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-கருணாஸ் தொகுதிக்கு ஒன்று செய்யாததால், அது அதிமுக-வினர் தொகுதி மக்களிடம் பெரும் சறுக்கலாகவும் சங்கடமாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இயல்பாக உள்ள ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் தொகுதியில் இருப்பதை “குற்றம் குற்றமே” நிருபர்கள் குழுவில் விசிட்டில் அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி, அமமுக வேட்பாளர் ஆனந்த், கணிசமாக வாக்குகளை பிரிக்கிறார். இதுவும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது.

வ து ந ஆனந்த் (அமமுக)

 

இதனால், திருவாடானை தொகுதியை பொருத்தவரை பிரதான போட்டி அ.ம.மு.க வேட்பாளர் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரத்தில் வேகம், உள்ளூர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து வாக்குறுதிகள், பாரம்பரிய திமுக வாக்குகள் ஆகியன கைகொடுப்பதால், திருவாடானையில் காங்கிரஸ் கட்சியின் ‘கை’ தான் ஓங்கி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon