உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு உலாவும் திருடர்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்கள் சுற்றி வரும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே கொசுவம் பாளையம், சிறிய கவுண்டம்பாளையம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட இடங்களில் சில தினங்களாக திருடர்கள் சுற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்தது.
இதுபோன்ற சூழலில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு அருகே உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு திருடர்கள் வீடுகளை நோட்டமிடுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.






