--- --:--:-- --

ரயிலில் அடுத்தடுத்து கழன்ற பெட்டிகள்.. அலறிய பயணிகள்..!

6

சென்னை சைதாப்பேட்டையில் புறநகர் மின்சார ரயிலின் பெட்டிகள் கழன்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 

சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில் நான்கு பெட்டிகள் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென கழன்றதால் ரயில் வண்டி நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

பெட்டிகள் அனைத்தும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் ரயில் சேவை சீரானது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

 

Right Menu Icon