பாலியல் புகாரில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2வது நாளாக விசாரணை..!
பாலியல் புகாரில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையில் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்காக மூன்று நாட்கள் காவலில் எடுத்த அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் ராஜகோபாலன் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
அவன் மீது மேலும் ஐந்து புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பாக வாக்குமூலம் பெற காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவரின் செல்போன், லேப்டாப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






