மனைவியுடன் பேசிய இளைஞர் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம்..!
தேனி மாவட்டம் சின்னமனூரில் நேற்று முன்தினம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னமனூர் அருகே சாமி குளம் பகுதியை சேர்ந்தவர் காசில்கான். இவர் அலாவுதீன் என்பவரது மனைவியுடன் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அலாவுதீனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் அலாவுதீன் தனது மனைவியின் தந்தை முகமது சமீர் என்பவர் உடன் சேர்ந்து காசில் கானை கண்டித்துள்ளார்.
எனினும் இருவரும் தொடர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த அலாவுதீன் மற்றும் முகமது சமீர் ஆகியோர் சேர்ந்து காசில்கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அலாவுதீன் தனது மனைவி மூலமாக காசில் கானை சம்பவ இடத்திற்கு வரவழைத்து முகமது ஜமீருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். இது குறித்து காசில்கான் உறவினர் அளித்த புகாரின் பேரில் அலாவுதீன் அவரது மனைவி மற்றும் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





