செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!
சென்னையில் செல்ஃபி எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கொடுங்கையூர் சேர்ந்த மூர்த்தி என்பவர் நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றில் தவறி விழுந்தார் .
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளைஞரை மீட்டனர். கூவம் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் இருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி உயிர் தப்பினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






