தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞர்..!
சென்னையில் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த பிகாம் பட்டதாரி இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை வழியாக கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் பாலியல் செயலில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார்.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் 25 வயது இளைஞரை கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தனுஷ் கடந்த சில நாட்களில் மட்டும் தனியாக சென்ற 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேச்சுக் கொடுத்தபடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
வெளியே செல்ல அவமானப்பட்டு பல பெண்கள் புகார் அளிக்க தயங்கிய நிலையில் துணிவுடன் புகார் அளிக்க முன் வந்த கல்லூரி மாணவிக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்தனர். 10 மாத கைக்குழந்தையுடன் காதல் மனைவியை தவிக்க விட்டு சிறை சென்றுள்ளார்.





